இதுவிடயமாக பிரதேசத்திலுள்ள விவசாயிகளும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தமது கருத்துக்களை திங்கட்கிழமை 16.07.2018 ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தினர்.
காட்டு யானைத் தொல்லை, பருவம் தவறிய மழை, வாவி நீர்ப் பெருக்கு மற்றும் வர(ற)ட்சி என்பனவற்றிற்கிடையே பெரும் போராட்டத்தின் மத்தியில் தாம் விளைவித்த நெல்லை உலர்த்திப் பத்திரப்படுத்தி வைப்பதற்கு வழியில்லை என்று அவர்கள் தமது ஆதங்கத்தை வெளியிட்டனர்.
தமது உணவுத் தேவைக்காகவோ, விற்பனைக்காகவோ, அல்லது விதை நெல்லுக்காகவோ தாம் விளைவித்த நெல்லை உலர்த்திப் பத்திரப்படுத்தி வைப்பதற்கு வசதி வாய்ப்புக்கள் இல்லாததால் தாங்கள் பெரு நஷ;டம் அடைவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
எனினும் கிராமங்களை ஊடறுத்துச் செல்லும் தார் வீதிகளில் நெல்லைப் பரப்பி அவ்வப்போது வசதிக்கேற்ற வகையில் உலர வைத்தெடுப்பதாகக் கூறும் கிராமத்து விவசாயிகள் இதனால் கால்நடைகள் உண்பதாகவும், நெல் வாகனங்களின் சில்லுகளில்பட்டு சேதமடைந்து விடுவதாகவும் கால் நடைகள் நெல்லை உண்பதாகவும் கூறுகின்றனர்.
மேலும் வீதியைப் பயன்படுத்துவோர் தங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுவதாக நச்சரிப்பதாகவும் கூறுகின்றனர்.
இத்தகைய சிரமங்களையும் இழப்புக்களையும் தவிர்த்துக் கொள்வதற்காக பிரதேச விவசாயிகளுக்கென பொதுவானதொரு நெல் உலர வைக்கும் களத்தை சம்பந்தப்பட்ட விவசாய, கமநல மற்றும் நெற் சந்தைப்படுத்தும் திணைக்களங்கள் அமைத்துதவினால் அது விவசாயிகளுக்கான பெரும் நன்மை பயக்கும் எனவும் பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.