Breaking

Post Top Ad

Tuesday, July 24, 2018

வீதி விபத்தில் சாரதிக்கு காலுடைந்தது


ஏறாவூர் பொலிஸ் பிரிவு, புன்னைக்குடா வீதியை அண்டியுள்ள ஐயன்கேணி சந்தியில் செவ்வாய்க்கிழமை 24.07.2018 பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் சிறிய ரக உழவு இயந்திரத்தின் சாரதியொருவர் காலுடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவத்தில் ஏறாவூரைச் சேர்ந்த முஹம்மத் கலீல் (வயது 42) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

சிறிய ரக உழவு இயந்திரத்தை அதன்இழுவைப் பெட்டியில் நெல் மூடைகளை ஏற்றிக் கொண்டு புன்னைக்குடா வீதிக்குத் திரும்பும்போது நேரெதிரே வந்து கொண்டிருந்த பட்டா ரக வாகனம் உழவு இயந்திரத்தின் மீது மோதியுள்ளது.

இதில் உழவு இயந்திர சாரதி தூக்கி வீசப்பட்ட நிலையில் காலுடைந்து படுகாயமடைந்தார்.

உடனடியாக அவர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages