மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு ஊறணி பகுதியை சேர்ந்த செல்வராஜ் மேனன் என்பவருடைய வளர்ப்பு மாடு கடந்த இரண்டு நாட்களாக காணாமல் தேடப்பட்டு வந்த நிலையில் இறைச்சிக்காக வெட்டுவதற்கு கொண்டு செல்லும் போது மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் வைத்து மாட்டையும் மாட்டை கொண்டு சென்ற இரண்டு நபர்களையும் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டதாக திராய்மடு – கொக்குவில் காவலரண் பொலிசார் தெரிவித்தனர் .
பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் திராய்மடு – கொக்குவில் காவலரண் பொலிசாரிடம் ஒப்படைக்க பட்டதன் பின் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளின் பின் மேலதிக நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த இரண்டு நபர்களையும் திருடப்பட்ட மாட்டையும் மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
குறித்த விடயம் தொடர்பாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் இக்கிராம மக்களின் 15 வளர்ப்பு மாடுகள் காணாமல் போயுள்ளதாகவும் இவ்வாறு காணாமல் போன மாடுகள் குறித்த நபர்களால் திருடப்பட்டு இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கின்றனர்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.