வடக்கு முதலமைச்சரை கைது செய்ய சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினருக்கு தகவல்களை வழங்க வேண்டாம் என கூறியுள்ள வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை, அனைவருக்கும் ஒரே விதமாக சட்டத்தை செயற்படுத்த வேண்டும் எனவும் இந்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய முதலமைச்சர், தன்னிடம் கேட்காமல் இராணுவத்தினருக்கு தகவல்களை வழங்க வேண்டாம் என வட மாகாண அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.