
மட்டக்களப்பு, கரடியனாறு பிரதேசத்திலுள்ள (ஏறாவூர் பற்று பிரதேசசபை) பிரிவிற்க்குட்பட்ட கித்துள் கிராம சிவன் கோயில் வீதி இதுவரை புனரமைக்கப்படாமையில் அப் பகுதியில் வாழும் மக்கள் மழை தவிர்ந்த ஏனைய காலங்களில் மண் தூசுகளையே அதிகம் சுவாசிக்க நேரிடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் மண் ஏற்றுவதற்கான அனுமதி கனரக வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் இவ் வீதியினுடாகவே வாகன போக்குவரத்து அதிகம் நிலவுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இவ் வீதியினுடாக போக்குவரத்து செய்யும் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் அப்பகுதி மக்கள் அனைவரும் சுவாசம் சம்மந்தமான நோய்கள் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி வாழ் பொதுமக்கள் அச்சம் கொள்கின்றனர்.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்,பிரதேச செயலகத்திற்க்கும் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தனர். இப்பகுதி வாழ் மக்களின் இந்நிலைக்கு விடிவு எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் அப்பகுதி பொதுமக்கள் காணப்படுவதோடு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இவ் வீதியை புனரமைத்து தரும்மாறும் கேட்டுக்கொள்கின்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.