நேற்று(7) மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்களில் இடம்பெற்ற 96 ஆவது தேசிய சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந் நிகழ்வில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா, பிரதி அமைச்சர்களான அமீர் அலி, புத்திக பத்திரன, வர்த்தக வாணிகத்துறை அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோக்க, தேசிய கூட்டுறவு சபையின் தலைவர் லலித் ஏ.பீரிஸ் மற்றும் கூட்டுறவுத்துறையில் உள்ள உள்நாட்டு, வெளிநாட்டு அதிதிகளும் கலந்துகொண்டனர்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கூட்டுறவுத்துறையின் நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை கருத்திற்கொண்டு இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம். அந்த வகையில் கூட்டுறவு இயக்கத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குறித்த அமைச்சு மற்றும் தேசிய கூட்டுறவு சபையுடன் இணைந்து மிகவும் செயற்திறன் வாய்ந்த நிகழ்ச்சித்திட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம்.
அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேசிய பொருளாதார சபையில் தேசிய கூட்டுறவு சபையையும் அத்துறையில் உள்ள நிபுணர்களையும் பங்குபற்றச் செய்யவுள்ளதனூடாக கூட்டுறவு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்காக எடுக்க வேண்டிய தீர்மானங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடவுமுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.