Breaking

Post Top Ad

Monday, July 2, 2018

வேகமாகவும்,அசாதாரணமாகவும் மோட்டார்சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள். ஒருவர் படுகாயமடைந்து கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றம்

(க. விஜயரெத்தினம்)
துறைநீலாவணையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் சனிக்கிழமை(30.6.2018) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


துறைநீலாவணை கிராமத்தில் இருந்து இரண்டு இளைஞர்கள் தலைக்கவசம் அணியாமல் பிரதான வீதியுடாக பயணித்தார்கள்.பயணிக்கும் வீதியில் ஆமை நகர்ந்து கொண்டிருந்தது.ஆமையை கவனிக்காமல் அதன் மேலாக வேகமாக சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் ஏற்றப்பட்டு தூரத்துக்கு வீசப்பட்டுள்ளது.குறித்த விபத்தில் சிக்குண்டவர்கள் போக்குவரத்து சட்டத்திற்கு முரணான வகையில் அசாதாரண நிலையிலே மோட்டார் சைக்கிளை செலுத்தி விபத்துக்குள்ளானதாக களுவாஞ்சிகுடி  போக்குவரத்து பொலிசார் தெரிவிக்கின்றார்கள்.

இந்த விபத்தில் துறைநீலாவணை 5ம் வட்டாரத்தை சேர்ந்த உதயகுமார்-தினேஸ்கண்ணன் (வயது-27)என்பரே தலை,மூக்கு பலமாக அடிப்பட்டு இரத்த காயங்களுடன் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிசிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டும், அங்கிருந்து சிசிச்சையளிக்க முடியாமல் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அவசர விபத்துப்பிரிவு தகவல்களை தெரிவித்தது.இது சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக 18 வயதை பூர்த்தியடையாதவர்களும்,போக்குவரத்து சட்டத்திற்கு முரணான முறையிலும்,தலைக்கவசம் அணியாமலும்,விபத்துக்களை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படும் மனநோயாளிகளாகவும், வாகனங்களை செலுத்தி விபத்துக்களையும்,மரணங்களையும் ஏற்படுத்தி வருகின்றார்கள்.இது சம்பந்தமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பொலிஸ்மாதிபர் பூஜித ஜயசுந்த அவர்கள் போக்குவரத்து சட்டங்களை மீறுவோருக்கு எதிராகவும்,போக்குவரத்து சட்டத்திலிருந்து குந்தகம் விளைவிப்போருக்கு எதிராகவும் இறுக்கமான சட்டத்தை பிரயோகிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும்,கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மாதிபர்,மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்,பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கும் மேற்கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மதத்தலைவர்கள்,சமாதான அமைப்புக்கள்,நல்லிணக்க அமைப்புக்கள் கோரிக்கை முன்வைக்கின்றார்கள்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages