அதி வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் ஏறாவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பலியானதாகவும் ஒரு சிறுவன் உட்பட மூவர் கை கால்கள் உடைந்த நிலையில் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு - ஏறாவூர், மீராகேணி அஹமட் பரீட் விளையாட்டுக் கழக இளைஞர்கள் 6 பேர் கல்லால்லைக்கு விளையாட்டு நிகழ்வொன்றுக்காகச் சென்று 3 மோட்டார் சைக்கிள்களில் ஏறாவூர் திரும்பிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞர்கள் காட்டு யானைகள் கடக்கும் புணானைக்கும் நாவலடிக்கும் இடைப்பட்ட புதர்ப் பகுதிகளைத் தாண்டிச் செல்லும்போது ஒன்றன்பின் ஒன்றாக மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாகச் செலுத்தியுள்ளனர்.
அப்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியுள்ளன.
அதில் மோட்டார் சைக்கிளொன்றின் பின்னால் அமர்ந்து வந்துகொண்டிருந்த ஏறாவூர் போக்கர் வீதியை அண்டி வசிக்கும் லாபீர் ஹில்மி (வயது 22) என்பவர் மரணமடைந்துள்ளார்.
மேலும் மூவர் கை, கால்கள் உடைந்த நிலையில் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஏறாவூரைச் சேர்ந்தவர்களான மஹ்றூப் அறபாத் (வயது 28), இஸ்மாயில் நிம்ஜாத் (வயது 34), அப்துல் காதர் முஹம்மது அமான் (வயது 15) ஆகியோரே படுகாமடைந்தவர்களாகும்.
மரணமடைந்தவரின் சடலம் உடற்கூறாய்வுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம்பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.