ஆலையடிவேம்பு பிரதேச செயலக சந்தியின் அருகில் உள்ள தொலைபேசி இணைப்புகள் பொருத்தப்பட்டுள்ள கம்பமொன்று முறிந்து விழும் நிலையில் காணப்படுகின்றது.
அதிக தொலைபேசி இணைப்புகளின் வயர்களோடு காணப்படும் இத்தூணானது எவ்வேளையிலும் உடைந்து விழக்கூடிய சந்தர்ப்பத்துடன் காணப்படுகின்றது.
கவனிப்பாரற்ற நிலையில் காணப்படும் குறித்த தூண் வீழ்கின்ற பட்சத்தில் சில உயிரிழப்புகளும் ஏற்படுவதுடன், உடமைகளுக்கும் சேதம் ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்படுகின்றது.
ஆகவே, பாரிய விளைவுகள் ஏற்படுவதற்கு முன்னர் குறித்த தூணை அகற்றி புதிய தூணொன்றை நடுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post Top Ad
Saturday, July 21, 2018
முறிந்து விழும் நிலையில் தொலைபேசி கம்பம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.