Breaking

Post Top Ad

Saturday, July 7, 2018

கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தினை எல்லா மாவட்டங்களிலும் செயற்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம் - மட்டக்களப்பில் அமைச்சர் ரிசாட்

இலங்கையில் கூட்டுறவுத்துறையை எல்லோரும் விரும்பத்தக்க வகையில் நிபுணத்துவம் வாய்ந்த துறையாக மாற்றியமைக்க நாம் திட்டமிட்டுள்ளோம். 

சில மாகாணங்களில் கூட்டுறவுத்துறையில் கடமையாற்றும் ஊழியர்கள் அவர்களின் நன்மை கருதி அரசாங்கத்தால் ஓய்வூதியத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஓய்வூதியத் திட்டத்தினை எல்லா மாவட்டங்களிலும் உள்ள ஊழியர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.


என வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியூதின் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் சனிக்கிழமை (7.7.2018) நடைபெற்ற கூட்டுறவு தினவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,


100 வருடங்கள் பழமை வாய்ந்த துறையாக கூட்டுறவுத்துறை காணப்படுகின்றது. இவ்வாறுள்ள இக்கூட்டுறவுத்துறையில் 85 இலட்சம் அங்கத்தவர்கள் இருக்கின்றார்கள். நாட்டில் உள்ள மொத்த சனத்தொகையில் 40 வீதம் அங்கத்தவர்கள் காணப்படுகின்றார்கள். 


கைத்தொழில், சிறுகைத்தொழில், வியாபாரம், மீன்பிடி, விவசாயம், சிறு முயற்சியான்மை, வங்கித்தொழில் உள்ளிட்ட வேலை வாய்ப்புக்களை ஜனாதிபதியும், பிரதமரும் எங்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளார்கள். அவர்களுக்கு நான் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.

அனைவரினதும் ஒத்துழைப்புடன் கூட்டுறவுத்துறையை ஒரு தெளிவான கொள்கையுடன் கட்டியெழுப்புவதற்கு நாம் திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.

இக் கூட்டுறவுத்துறை மூலம் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களும் உள்வாங்கப்பட்டுள்ளது. அதாவது பொதுமக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கே எமது வர்த்தக வாணிபத்துறை அமைச்சு அனைவரினதும் கருத்துக்களை உள்வாங்கி செயற்பட்டுவருகின்றது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் நாட்டை ஜனாதிபதியும், பிரதமரும் நல்ல நிலைக்கே கொண்டு சென்றுள்ளார்கள். 


கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கும் இம்மாதத்திலிருந்து 1000 ரூபா வெகுமதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டுறவுத்துறையை எதிர்காலத்தில் நிபுணத்துவம், தொழிநுட்பம் வாய்ந்த துறையாக நாம் மாற்றவுள்ளோம்,  எனத் தெரிவித்தார்.


 
கூட்டுறவுத்துறையை எல்லோரும் விரும்பத்தக்க தொழில்நுட்பம் வாய்ந்த வகையில் கட்டியெழுப்பவுள்ளோம் - மட்டக்களப்பில் ரிசாட் பதியூதின்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages