மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திராய்மடு தமிழ் வித்தியாலயத்திற்குள் நேற்று மாலை அத்துமீறிச்சென்றுள்ள இனந்தெரியாத நபர்கள் மாணவர்களின் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களின் இருக்கைகள்,ஆவணங்களை எரியூட்டியுள்ளதுடன் மேசைகளில் மலம் கழித்தும் சென்றுள்ளனர்.
பின்தங்கிய பாடசாலையான இப்பாடசாலையில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை சிறப்பாக அமைக்கப்பட்ட பதாகைகள் மற்றும் செயற்பாட்டு பொருட்களும் கிளித்து நாசமாக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.