ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து மக்கள் பாவனைக்குக் கையளிப்பதற்காக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்ஹ ஞாயிற்றுக்கிழமை 29.07.2018 ஏறாவூருக்கு வருகை தரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதமரின் குறித்த வருகையையொட்டி ஏறாவூர் நகர பிரதேச செயலகம் அமைந்துள்ள ஏறாவூர் வாவிக்கரைப் பிரதேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 40 மில்லியன் ரூபாய் செலவில் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்துக்கான இப்புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் பகல் 11 மணிக்கு இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தின் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அரசியல் தலைவர்களும் கூடவே பிரதம மந்திரியுடன் கலந்து கொள்கின்றனர்.
பிரதம மந்திரியின் ஏறாவூர் வருகையையொட்டிய முன்னாயத்தங்கள் மும்முரமாக இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.