
தமது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாது போனால், விஜயகலா மகேஸ்வரனுக்கு கோபம் ஏற்படுவது நியாயமானது.
அவருக்கு மட்டுமல்ல எமக்கு அப்படியான மன வேதனை ஏற்படும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. எந்த வகையில் மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்படுவதை விஜயகலா மகேஸ்வரன் எந்த வகையிலும் விரும்பமாட்டார்.
ரஞ்சன் ராமநாயக்க செய்தது மிகப் பெரிய தவறு. அவர் மிகவும் நம்பிக்கையில் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
ஊடகங்களுக்கு எதிரில் பேசுவதென்றால், நான் ஊடகங்களுக்கு முன்னால் பேசுகிறேன் அதற்கு பதில் தாருங்கள் என்று முன்கூட்டியே கூறியிருக்க வேண்டும் எனவும் தயா கமகே கூறியுள்ளார்.
கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.