தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் 5பேருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதாக சபையால் தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை தொடர்பாக திங்கட்கிழமை (23ம் திகதி) கேட்டபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 19.07.2018ம் திகதி நடைபெற்ற விஷேட மாநகரசபை அமர்வில் உறுப்பினர் திருமதி.செல்வி மனோகரினால் அண்மையில் நடத்தப்பட்ட மட்டக்களப்பு மாநகரசபையில்
வேலைவாய்ப்புக்களுக்கு ஆட்கள் உள்ளீர்க்கப்படும் போது வெளிப்பாட்டுத்தன்மையுடன் திறந்த நேர்முகத் தேர்வின் மூலம் உள்ளீர்க்கப்பட வேண்டும். பின்கதவால் அரசியல் ரீதியாக வேலையாட்கள் உள்ளீர்க்கப்படுமானால் அதற்கெதிராக மக்களிடம் நேரடியாகச் செல்வோம் என ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தினை மீழப்பெறவேண்டும் இல்லையேல் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பிரேரணையானது 19.07.2018ம் திகதிய சபையில் வாதப்பிரதிவாதங்களுக்கோ கருத்து கேட்பதற்கோ இடம் கொடுக்காது நேரடியாக வாக்கெடுப்புக்குச் செல்ல முற்பட்ட வேளையில் குறித்த செயற்பாடானது கருத்துச் சுதந்திரத்திற்கு முரணானது. அத்துடன் வெளிப்பாட்டுத் தன்மையுடன் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோருவதற்கு மக்கள் பிரதிநிதிக்கு உரிமை இல்லையா? மக்களின் நலன்சார்ந்து அவர்களின் பிரதிநிதியாகவே மாநகரசபையில் நாம் அங்கம் வகிக்கின்றோம்.
மக்களுக்காகவே நாங்களே தவிர அரசியல் தலைமைகளுக்காக மக்களல்ல என்பதுவே நாங்கள் 05 உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தோம்.
வெளிநடப்பு செய்வது சட்டத்திற்கு முரணானதோ சபையை அவமதிப்பதோ என பொருட்படாது. நாம் தகாத வார்த்தை பிரயோகம் செய்ததாகவும் சபையில் அவமரியாதை செய்ததாகவும் அதனால் எம் 05 உறுப்பினர்களையும் ஒருமாத கால இரடக்கால தடை உத்தரவுக்கான பிரேரணை நிறைவேற்றியதாக பத்திரிகைவாயிலாக அறிகின்றோம்.
இதற்கான உத்தியோகபூர்வமான கடிதம் கிடைக்கும் பட்சத்தில் அதற்கு நீதி கோரி நீதிமன்றம் செல்ல தயாராக உள்ளோம். என தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.