இவர்கள் ஏறாவூரிலிருந்து தனிப்பட்ட விடயமாக கொழும்பு நோக்கி புறப்பட்டு கொண்டிருக்கையிலே மின்கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
ஏறாவூர் விதானையார் வீதியை சேர்ந்த ரமீஸ் மௌலவியின் மகனான சாபித்(வயது-9) என்பவரே மரணமடைந்தவராவார்.
இவரது சடலம் ஏறாவூர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விபத்தில் மரணமடைந்த சிறுவனின் தந்தை ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்தில் மேலும் 6 பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்புக்கு போதனா வைத்தியசாலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சாரசபையின் மின்கம்பத்துடன் மினிரக வேன் மோதிய நிலையில் செங்கலடி முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.