Breaking

Post Top Ad

Thursday, July 5, 2018

600 பொலி­ஸாரை படு­கொலை செய்த கருணவுக்கு பதவி வழங்கியவர்கள் விஜயகலா பற்றி கூச்சலுடுகின்றனர்! - ரணில் தெரிவிப்பு

600 பொலி­ஸாரை படு­கொலை செய்த கருணா அம்­மானை சுதந்­திரக் கட்­சியின் உப தலை­வ­ராக்கி விட்டு பிர­பா­க­ரனை கொன்­ற­ பொன்சேகாவை சிறையில் அடைத்­தனர். யுத்­தத்தை வென்­ற­வரை சிறையில் அடைத்து விட்டு தற்­போது வந்து விஜ­ய­க­லாவின் உரை தொடர்பாக எப்­படி எதி­ர­ணி­யினால் சபையில் கூச்­ச­லிட முடியும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் கேள்வி எழுப்­பினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் உரை தொடர்­பாக விசேட கூற்­றொன்றை முன்­வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.


பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,

விடு­தலை புலிகள் அமைப்பை நாம் தடை செய்­துள்ளோம். அந்த தடையை மீறி விடு­தலை புலி­களை மீள் உரு­வாக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. நாட்டின் ஒற்­றை­யாட்­சி­யையும்  பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரி­மையையும் நாம் பாது­காப்போம். இந்த  கொள்­கையின் பிர­காரம் நாம் செயற்­ப­டுவோம். அத்­துடன் மூவின மக்­களும் எதிர்­பார்க்கும்  அர­சியல் தீர்வின் ஊடாக  மனித உரி­மை­யையும் பாது­காத்து அதி­கா­ரத்தை பகிர்ந்து தீர்வு வழங்க வேண்­டி­யுள்­ளது. 

அத்­துடன் வடக்கு,கிழக்கு அபி­வி­ருத்தி மிகவும் அவ­சி­ய­மாகும்.காணி விடு­விப்­புக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இந்­நி­லையில் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் உரையை நான் கேட்­ட­வுடன் இது தொடர்­பாக ஆராய்ந்து பார்த்தேன். இது தொடர்­பாக எமது கட்­சியின் அர­சியல் குழு நேற்று (நேற்று முன்தினம்) கூடி­யது. அவர் மீதான விசா­ரணை தொடர்­பாக தீர்­மானம் எடுத்­துள்ளோம். விஜ­ய­கலா மகேஸ்­வரன் சுக­யீ­ன­முற்று யாழ்ப்­பா­ணத்தில் இருப்­ப­தா­கவும் இன்­றைய தினம் (நேற்று) வரு­வ­தா­கவும்  அவர் எனக்கு அறி­வித்தார்.

நான் அவரை இன்று (நேற்று) சந்­திப்பேன். அதன் பின்னர் விசா­ரித்து உரிய நட­வ­டிக்கை எடுப்பேன்.  எமது பாது­காப்பு படை­யினர் நாட்டை பாது­காக்க உயிரை தியாகம் செய்­தனர். அத்­துடன் ஐக்­கிய தேசியக் கட்­சி­யிலும் தமிழ் கட்­சி­க­ளிலும் சுதந்­திரக் கட்­சி­யிலும் பல தலை­வர்­களை விடு­தலை புலிகள் அமைப்பு படு­கொலை செய்­தது.ஆகவே இந்த விட­யத்தில் நாம் அனை­வரும் ஒரு கொள்­கையின் கீழ் உள்ளோம். 

நாட்டை பிள­வுப்­ப­டுத்­து­வது மாத்­தி­ர­மின்றி பாரா­ளு­மன்­றத்தை வலு­வில்­லாமல் செய்­வதே விடு­தலை புலி­களின் பிர­தான நோக்­க­மாக இருந்­தது. நேற்­றைய தினமும் பாரா­ளு­மன்­றத்தில் கூச்­ச­லிட்டு குழப்பி அடித்­தனர். எனினும்  இது தொடர்­பாக யார் கூச்­ச­லி­டு­கின்­றனர். 

600  பொலி­ஸாரை கொலை செய்த கருணா அம்­மானை அழைத்து சுதந்­திரக் கட்­சியின்  உப தலைவர் ஆக்கி விட்டு, பிர­பா­க­ர­னுக்கு பணம் வழங்கி ஜனா­தி­பதி தேர்­தலை வெற்றி கொண்டு விட்டு, விடு­தலை புலி­களை தோற்­க­டித்த இரா­ணுவ தள­ப­தியை சிறையில் அடைத்து விட்டு தற்­போது வந்து விஜ­ய­க­லாவின் உரை தொடர்­பாக எப்­படி  இவர்கள் கூச்­ச­லிட முடியும்.    

சபா­நா­ய­க­ருக்கு தனது தீர்­மா­னத்தை அறி­விக்க உரிமை உள்­ளது. ஆகவே சபா­நா­ய­கரே நீங்கள் காத்­தி­ர­மாக செயற்­பட வேண்டும். அப்­ப­டி­யாயின் அர­சியல் பழி­வாங்கல் தொடர்­பான சரத் பொன்­சே­காவின் நிலைப்­பாட்டை  நாம் அனை­வரும் ஒன்று இணைந்து பரி­சீ­லிக்­க­வேண்டும். ஏன் சரத் பொன்­சேகா கைது செய்­யப்­பட்டார்?.

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி தொடர்பாக கதையை திசைதிருப்பவும் அதனை நிறுத்தவுமே பாராளுமன்றத்தை நேற்று (நேற்று முன்தினம்) குழப்பி அடித்தனர்.தற்போது கூட்டு எதிர்க்கட்சியினர் பயந்து போய் உள்ளனர். 

600 பேரை கொன்றவரை சுதந்திரக் கட்சியின் உப தலைவராக்கி விட்டு பிரபாகரனை கொன்றவரை சிறையில் அடைத்தனர். அதுதானே உண்மை என்றார்.
No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages