மட்டக்களப்பு மாநகரசபையின் ஆறாவது அமர்வு மாநகரசபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இன்று ஆரம்பமானது.
இதன் போது குறித்த தடை தொடர்பான தீர்மானம் உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அண்மையில் முதல்வர், தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் செல்வி மனோகர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இது தொடர்பான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்காக இன்று சபையினால் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் வெளியேறிச்சென்ற நிலையில் உறுப்பினர் திருமதி செல்வி மனோகருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்போது சபையில் தேவையற்ற வார்தைகளை பிரயோகித்தமைக்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதை மையப்படுத்தி சபையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 32 உறுப்பினர்களில் 27 பேர் ஆதரவாக வாக்களித்ததுடன் ஐந்து உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
இதனடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் 5 பேருக்கு ஓரு மாதகால தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.