மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக நிலையான அபிவிருத்தி அமைச்சின் கிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டப் பணிப்பாளர் மேஜர் தீபக் அல்விஸ், அமைச்சின் மேலதிக செயலாளர் நெவில் பத்மசிறி, மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்இ மாவட்ட திட்டமிடல்ப் பிரதிப் பணிப்பாளர் ஏ.அமிர்தலிங்கம் கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் மற்றும் மற்றும் மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உயர் அதிகாரிகள் குடும்பிமலை இராணுவ முகாம் உயர் அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பல்லவர் காலத்தில் மக்களின் விவசாயத் செய்கை மற்றும் குடிநீருக்கு தேவைக்காக இக்குளம் பயன்படுத்தப்பட்டுவந்தது. கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தம் காரணமாக கவனிப்பாரற்ற நிலையில் காணப்பட்டது..
தற்போது இக்குளம் புனரமைக்கப்படுவதன் மூலம் 3000ஏக்கரில் நெற்செய்கை பண்ணப்படுவதுடன் 200க்கு மேற்பட்ட விவசாயக்குடும்பங்கள் மற்றும் கால்நடைகள் நன்மையடையவுள்ளன.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.