
1995இல் யாழ் குடாநாட்டை கைப்பற்ற முன்னேறிப்பாய்தல் நடவடிக்கையை இராணுவம் ஆரம்பித்தது. ஆகோர எறிகணை தாக்குதல்களால் வலிகாமம் தெற்கு, மேற்கு, வடக்கு, தென் மேற்கு பகுதி மக்கள் இடம்பெயர்ந்து நவாலி பகுதியில் தங்கியிருந்தனர். சென்.பீற்றர்ஸ் ஆலயம், சின்னக்கதிர்காம முருகன் ஆலயம், பொதுமக்கள் வீடுகளில் தங்கியிருந்தனர்.
23வருடங்களின் முன்னர் இதே நாளில் விமானப்படையின் புக்காரா விமானங்கள் 13 குண்டுகளை மக்கள் குடியிருப்புக்கள், ஆலயங்களை இலக்கு வைத்து வீசின.
நவாலி சென் பீற்றர்ஸ் ஆலயம், சின்னக்கதிர்காம முருகன் ஆலயம், அயலிலிருந்த 67 வீடுகள் முற்றாக அழிந்தன. 147 மக்கள் துடிதுடித்து கொல்லப்பட்டனர்.எரிபொருள் தடை, மருந்துத்தடைகளால் மக்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவோ, சிகிச்சையளிக்கவோ முடியாமல் போனது. 360 பேர் வரை காயமடைந்தனர். பலர் அவயங்களை இழந்தனர்.
சண்டிலப்பாய் பிரதேசசெயலக பிரிவில் கடமையாற்றிய ஜே-134 நவாலி வடக்கு கிராம அலுவலரான செல்வி ஹேமலதா செல்வராஜா, சில்லாலை பிரிவு கிராம அலுவலர் பிலிப்புப்பிள்ளை கபிரியேல்பிள்ளை ஆகியோர் கடமைநேரத்தில் மரணமானார்கள்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.