வாழ்க்கைத் திட்டத்திற்கான ஒரு துளி (DROPS OF LIFE PROJECT ) எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்தடவையாக ஹற்றன் நஷனல் வங்கியின் அல்-நஜாஹ் இஸ்லாமிய வங்கிப் பிரிவின் நிதி அனுசரனையுடன் ஹபிடட் ஹியுமனிடி ஸ்ரீலங்கா (ர்யடிவையவ குழச ர்ரஅயnவைல ளுசடையமெய) நிறுவனத்தினால் சுமார் 20 இலட்சம் ரூபாய் செலவில் மஞ்சந்தொடுவாய் வீட்டுத்திட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட 50 வறிய குடும்பங்களுக்கான குடி நீர் வசதியையும், மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்திற்கான மலசலகூடத் தொகுதியையும் நிர்மாணித்து கொடுத்துள்ளது.
மேற்படி 50 வறிய குடும்பங்களுக்கான குடி நீர் வசதியையும், மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்திற்கான மலசலகூடத் தொகுதியையும் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு 11 இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில் ஹற்றன் நஷனல் வங்கியின் காத்தான்குடி கிளை முகாமையாளர் ஜி.றிஸான் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட ஹற்றன் நஷனல் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் றுவான் மனதுங்க,அல்-நஜாஹ் இஸ்லாமிய வங்கிப் பிரிவின் தலைவர் ஹிஸாம் அலி,ஹபிடட் ஹியுமனிடி ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பெருநிறுவன உறவுகள் மற்றும் வள அபிவிருத்தி சிரேஷ்ட முகாமையாளர் மெலிசா ஜயசூரிய உள்ளிட்ட அதிதிகளினால் 50 வறிய குடும்பங்களுக்கான குடி நீர் வசதியும், மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்திற்கான மலசலகூடத் தொகுதியும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இங்கு ஹற்றன் நஷனல் வங்கியின் அல்-நஜாஹ் இஸ்லாமிய வங்கிப் பிரிவினால் ஒரு தொகுதி புத்தகங்கள் மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்திற்கு அதன் அதிபர் எம்.எல்.முஹம்மது கானிடம் கையளிக்கப்பட்டதோடு ,பாடசாலை வளாகத்தில் ஐந்து பயன்தரும் மரங்களும் நட்டி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் காத்தான்குடி வர்த்தக சங்கத் தலைவரும்,நகர சபை உறுப்பினருமான கே.எல்.எம்.பரீட் ஜேபி,காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் (பலாஹி),காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர், ஹற்றன் நஷனல் வங்கியின் கிழக்குப் பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் கேதீஸ்வரன், கிழக்குப் பிராந்திய முகாமையாளர் கிரிதரன், கிழக்குப் பிராந்திய இஸ்லாமிய வங்கிப் பிரிவின் பொறுப்பாளர் அஹமட் ராறி,மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலய அதிபர் எம்.எல்.முஹம்மது கான்,சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் ஹாரிஸ் ஜேபி, உட்பட உலமாக்கள், பாடசாலைகளின் அதிபர்கள்,ஊர் பிரமுகர்கள், ஹற்றன் நஷனல் வங்கியின் கிளை முகாமையாளர்கள், ஹபிடட் ஹியுமனிடி ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.