
உலோக இதயங்களின் காதலை மையப்படுத்தினாலும் இதில் ரோபோக்களின் தினசரி வாழ்க்கை எப்படியிருக்கும், மனிதர்களை ரோபோக்கள் எப்படிப் பார்க்கின்றன ஆகிய இரண்டு அம்சங்களை ஷங்கர் காட்சிகளின் வழியே கொண்டுவந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முழுக்க ரோபோக்களைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருப்பதால் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் குறைவுதான், ஆனால் ரஜினி உருவத்தில் இருக்கும் 3டி அனிமேஷன் ரோபோவின் அதகளம்தான் முழுப் படமும் என்கிறது படக்குழு.
3டி அனிமேஷன் கதாபாத்திரங்களை நடக்கவும் பேசவும் சண்டைபோட வைக்கவும், கிராஃபிக்ஸ் பணிகளே படம் தாமதம் ஆகக் காரணம் எனத் தெரியவந்திருக்கிறது.
2015ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி ‘2.0’ படப்பிடிப்பு தொடங்கியது. படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் முக்கியமான, ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய்குமார் ஆகிய மூன்று கதாபாத்திரங்களையும் கிராபிக்ஸில் உருவாக்கி அவற்றை நடக்க, ஓட வைக்கும் முக்கியப் பணி நடைபெற்று வருகிறதாம்.
வெளிநாட்டுப் பணிகள் முடிவடைந்தவுடன் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை கிராஃபிக்ஸ் காட்சிகளை இணைக்கும் வேலைகள் தொடங்கும். இதற்கு மட்டுமே இரண்டு மாதங்கள் தேவைப்படும்.
அதன்பிறகு வர்ணமூட்டும் வேலைகள் தொடங்கும். இதில் நடிகர்கள் நடித்துப் படம்பிடிக்கப்பட்ட காட்சிகளில் இருக்கும் வண்ணமும் கிராஃபிக்ஸ் காட்சிகளில் இருக்கும் வண்ணத்தையும் சமன் செய்து ஒரேமாதிரி தோன்றச் செய்யும் ஜாலம் இது இதற்கு மூன்று மாதங்கள் பிடிக்கும்” என்கிறார்கள்.
இதற்கிடையில் 400 கோடி ரூபாய்க்கு (இந்திய நாணயம்) திட்டமிடப்பட்ட ‘2.0’ கிராஃபிக்ஸ் வேலைகள் கூடிக்கொண்டே செல்வதால் தற்போது அது 600 கோடியை நெருங்கும் என்று தயாரிப்புத் தரப்பில் தகவல் கிடைக்கிறது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.