செவ்வாய்க்கிரகம், 15 வருடங்களிற்கு பின்னர் தனது சுற்றுப்பாதையில் பூமியை அண்மித்துள்ளது.
சூரியன் அஸ்தமிக்கும் வேளையில், கிழக்கு வானில் செவ்வாய் கிரகத்தைக் காணமுடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் கோள்மண்டல கற்கைத் துறையின் பணிப்பாளர் கலாநிதி சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிரகம் பூமியிலிருந்து 57.6 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் பூமியை கடக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, செவ்வாய்க் கிரகத்தை பார்வையிடுவதற்கு விசேட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் இன்று (31) இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை விண்ணைப் பரிசோதிப்பதற்காக முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதனை, பல்கலைக்கழகத்தின் பாரியளவிலான தொலைநோக்கு கருவிகளை பயன்படுத்தி பார்வையிட முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.
Post Top Ad
Tuesday, July 31, 2018
15 வருடங்களின் பின் பூமியை அண்மித்த செவ்வாய்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.