Breaking

Post Top Ad

Sunday, July 1, 2018

மட்டக்களப்பு மாவட்ட14 பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு  மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில்   ஜுலை 01ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை)  இடம்பெற்றது.

சனிக்கிழமை தடகளப் போட்டிகள் நடைபெற்று, ஞாயிற்றுக்கிழமை இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை தொடக்க நிகழ்வில் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபமேற்றல் நிகழ்வு நடைபெற்றது.


இந் நிகழ்வில் அதிதிகளாக மாகாண உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சிறியானி விஜேயவிக்கிரம,  தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, கடற்றொழில் நீரியல்வள, கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர்   கலந்துகொண்டனர்.

இப் போட்டியில்மண்முனை வடக்கு பிரதேச செயலகம் 1ஆம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளும் 14 விளையாட்டு இல்லங்கள் அமைத்து போட்டிகளில் பங்கு கொண்டனர்.











  




















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages