Breaking

Post Top Ad

Monday, June 4, 2018

மட்டு. மாவட்டத்தில் 'சுப்பர் தரம்' ( Super Grade) விருதினைப் பெற்ற வங்கி ஊழியர்களுக்கு பாராட்டு

அகில இலங்கை ரீதியில்  சமுர்த்தி வங்கிகளின் தரப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்தில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு சமுர்த்தி வங்கிகள் "சுப்பர் தரம்" ( Super Grade) விருதினைப் பெற்றுக்கொண்டது.

இவ் விருதினைப் பெற்றுக்கொண்ட வங்கி முகாமையாளர் மற்றும் ஊழியர்களை பாராட்டி வரவேற்கும் நிகழ்வு ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (04ஆம் திகதி)நடைபெற்றது.

இலங்கை முழுவதும் உள்ள 1074 வங்கிகளில்   4ஆம் இடத்தில்  மாவடிவேம்பு வங்கியும், 7ஆம்  இடத்தில்  ஆறுமுகத்தான் குடியிருப்பு  வங்கியும் தெரிவுசெய்யப்பட்டு, அதற்காக விருதுகள் அண்மையில் (31.05.2018) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் நிதியமைச்சர், சமூக வலுவூட்டல்கள் அமைச்சர்  போன்றோரால் வழங்கப்பட்டது.


இவ் பாராட்டு நிகழ்வில்   ஏறாவூர் பற்று  பிதேச செயலாளர் ந.வில்வரெட்னம்,  உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன், உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையா முகாமையாளர் ஜெயராஜ்   கருணாகரன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டு வங்கி ஊழியர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்தனர்.








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages