Breaking

Post Top Ad

Friday, June 15, 2018

றாணமடு பாலர் பாடசாலை மாணவர்களுக்கு ஆரோக்கியமான ஆகாரம் வளங்கும் நிகழ்வு ஆரம்பிப்பு.

(படுவான் எஸ்.நவா)
றாணமடு பாலர் பாடசாலை மாணவர்களுக்கு ஆரோக்கியமான ஆகாரம் வளங்கும் நிகழ்வு றாணமடு பாலர் பாடசாலையின் ஆசிரியர் தலைமையில் 09 யூண் அன்று நடந்தேறியது. இதில் பொருளாதாரவிவகாரங்கள் அமைச்சின் உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன்,முன்பள்ளிதொடர்பான போரதீவுப்பற்று பி.தே.செயலகத்தின் அபிவிருத்த pஉத்தியோகத்தர் கமல்ராஜ், இக்கிராமத்தின் கி.சேவகர் மற்றும் ஆசிரியரும் சமூகஆர்வலருமாகிய மா.ஐPவரெட்டினம் விளையாட்டுக் களகங்களின் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர்கள் எனபலர் கலந்து சிறப்பித்துவைத்தனர்.


இந்த நலத்திட்டத்தின் நான்காவது பாடசாலை இதுவாகும்,பின்தங்கிய கிராமப்புற மாணவர்களின் போஷாக்கு மட்டத்தினை அதிகரித்து அதனூடாக கற்பதற்கு விருப்பத்தினையும் அதற்கானஆரோக்கியத்தினையும் ஏற்படுத்தும் வகையில் நிக் அன்ட் நெல்லிஅமைப்பினரின் நிதிஅனுசரணையில் கிழக்கிலங்கை இந்துசமயசமுகஅபிவிருத்திச் சபையினரின் திட்டத்தில் ஒன்றாக பிரதேசசெயலகப் பிரிவினருடன் இணைந்து செயற்படுத்தும் ஒரு வெற்றிகரமான திட்டம் இதுவாகும்.

'இந்ததிட்டத்தில் மாணவர்கள்  மாத்திரமல்லாமல் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வினையும்,பெரியோர்களுக்கு பொறுப்புணர்வையும் ஏற்படுத்தும் ஒரு ஒருங்கிணைந்த செயற்பாடாகவே இது கொண்டு நடாத்தப்படுகின்றது. எமது பிரதேசங்களில் சிறுவர்களுக்கான கல்விஅவ்வளவாக கணக்கிலெடுக்கப்படுவதில்லை,ஆனால் அவர்களுக்கான கல்வி மிகமிக அத்தியாவசியமானதொன்று. அதனால்தான் 'இளமையில் கல்விசிலையில் எழுத்து'என்றும் 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்றும்'சொல்லி இருக்கிறார்கள். வருங்காலத்தில் இந்த மாணவர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் ஆற்றல் வளர்த்தெடுக்கப்படவேண்டும் எனவும்'சி.தணிகசீலன் குறிப்பிட்டதுடன்,சிறுவர்களுக்கு விருப்பமானகதையொன்றின் மூலம் நீதி,அறம் பற்றி குழந்தைகளுக்கு எடுத்துரைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

'பிள்ளைகள் ஆரோக்கியமான உணவுகளை மாத்திரம் உட்கொண்டால் அதுபோது மானதல்ல,தவிரவும் நல்லசுகாதாரப் பழக்கவழக்கங்களைக் கொண்டிருக்கவேண்டும். அதற்கு பெற்றோர்கள் தகுந்த செல்வாக்கினை நல்கமுன்வரவேண்டும். பலகடினத்தின் மத்தியில் இந்ததிட்டத்தினை நாம் இவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படுத்துகின்றோம்,அதை பயன்படுத்தி பிள்ளைகளை கல்வியிலும் ஆரோக்கியத்திலும் முன்னெடுத்துச் செல்லுவது உங்கள் கையிலேயே உள்ளது'எனகமல்ராஜ் தெரிவித்தார்.

இச்செயற்திட்டம் பெற்றோரிடம் மாத்திரமின்றி ஊர் மக்களிடையேயும் வரவேற்பைப் பெற்றிருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது. இத்திட்டம் இடைவிடாமல் நடைபெறுவதற்கு பெற்றோர், ஊர் மக்கள் ஆதரவாக இருப்பதாகக் கூறி,ஒழுங்கான முறையில் இதனைக் கொண்டு நடாத்துகின்றமைக்காக நெஞ்சார்ந்த நன்றியினையும் தெரிவித்து, இவ்வாறான திட்டம் பின்தங்கிய கிராமத்திற்கு வரப்பிரசாதம் என விதந்துரைத்தமை இந்த ஏற்பாட்டுக் குழுவினருக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages