Breaking

Post Top Ad

Monday, June 4, 2018

பாடசாலை நிகழ்வில் அரசியல் பேசிய பிரதி அமைச்சருக்கு நேர்ந்த கதி!

பழைய மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வில் அரசியல் பேசிய பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நெருக்கடியான நிலையை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

நீர்கொழும்பு மாரி ஸ்டெல்லா கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
பழைய மாணவரான ரஞ்சன் ராமநாயக்கவிற்கும் இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஏற்பாட்டாளர்களின் கோரிக்கைக்கு அமைய ரஞ்சன் ராமநாயக்க பாடல் ஒன்றை பாடியுள்ளார்.அதன் பின்னர் அரசியல் கருத்துக்களை வெளியிட்ட காரணத்தினால் ஏனைய பழைய மாணவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தினால் பழைய மாணவர் ஒன்று கூடல் நிகழ்வில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.அதன் பின்னர் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.

நட்பு ரீதியான ஒன்று கூடலில் பங்கேற்று அரசியல் பேசியதனால், ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஒன்று கூடலின் இடை நடுவில் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேற நேரிட்டது.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages