Breaking

Post Top Ad

Wednesday, June 27, 2018

கொன்கிரீட் தூண்களில் ஏறுவதற்கு புதிய சப்பாத்துகள் தயாரிப்பு

கொன்கிறீட் தூண்களில் பாதுகாப்பாகவும், விரைவாகவும் ஏறக்கூடிய

வகையில் இரும்பிலாலான சப்பாத்துகளை ஹட்டன் மின்சார சபை நிலையத்தின் அதிகாரி​யான நிஹால் சமரக்கோன் தயாரித்துள்ளார்.

மின்சார சபை ஊழியர்கள் மின்சார இணைப்புகளை வழங்குதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை ஏணியின் உதவியுடனேயே செய்து வரும் நிலையில், குறித்த அதிகாரியால் இந்த புதிய சப்பாத்துகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

நடக்கும் வேகத்தைப் போலவே இந்த சப்பாத்துகளை பயன்படுத்தி வேகமாக கொங்கிரீட் தூண்களில் ஏறமுடியுமென்பதுடன், இதன் மூலம் மின்சார தாக்குதலிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ நிறையுடைய குறித்த சப்பாத்துகளை மின்சார சபையிடம் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்காக  ஷேடன் அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் நிஹால் தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages