Breaking

Post Top Ad

Friday, June 8, 2018

நுண் கடன் திட்டத்துக்கு எதிராக மஜகர் கையளிப்பு

நுண் கடன் திட்டத்துக்கு எதிராக சமூக மட்ட அமப்புகளின் பிரதிநிதிகள் சிலர்   இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்திற்குச் சென்ற சமூக அமைப்புக்களைச் சேர்ந்த  பிரதிநிதிகள்  மத்திய வங்கியின் பிராந்திய முகாமையாளாரான  பாலகிருஸ்ணன் சிவதீபனிடம் கோரிக்கை மகஜரை அண்மையில் கையளித்தனர்.

நுண் கடன் திட்டத்தினால் சமூகத்தில் குறிப்பாக பெண்கள் மத்தியில் ஏற்படுகின்ற பாதிப்புகள், தொடர்பிலும் அதனை கட்டுப்படுத்த மத்திய வங்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியும் தங்களின்  கோரிக்கை  மகஜரை கையளித்தாகவும்,  இன்னும் சில நாட்களில் நுண் கடன் திட்டத்திற்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும்  மகஜரை கையளித்த பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages