Wednesday, June 13, 2018

"உணர்வுகள் புரியாவிட்டாலும் மனிதர்களை மதிக்கத் தெரியவேண்டும்" - விக்கினேஸ்வரனின் செயல் கவலைக்குரியது!

SHARE
அந்தளவு தூரத்தில் இருந்து வந்து அந்தப்பொடியன்கள் குடுத்த காசை வாங்காமல் ஓடிய முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் செயல்  கவலைக்குரியதாயினும்,

தவராசா கேட்ட 7000 காசை அந்தண்டே மூஞ்சில விட்டு எறிய துணிவில்லாத முதலமைச்சர் அவர்களே!

நீங்கள் காசைத்திருப்பிக்கேட்ட எதிர்க்கட்சி தலைவர் தவராசாவைபோல் கீழ்தனமாக இன்று நடந்திருக்கிறீர்கள்.

எவ்வளவு நாள் கஸ்ரப்பட்டு ஒவ்வொரு ரூபாவா 7000ரூபா பணத்தை கிழக்கில் இருந்து கொண்டுவந்த பொடியளை வடக்கு மாகாண வாசலில் வைச்சே திருப்பி அனுப்பிய விக்கினேஸ்வரனின் செயலை ஒருத்தரும் கண்டிப்பதாக தெரியவில்லை!

அவ்வளவு தூரம் வந்த பொடியளை கூப்பிட்டு உள்ள வைச்சு கதைக்ககூட நேரமில்லை  விக்கினேஸ்வரனுக்கு!!!
அவ்வளவு வேலைக்கடுப்பு...!

"உணர்வுகள் புரியாவிட்டாலும் மனிதர்களை மதிக்கத் தெரியவேண்டும்"

முறைக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்தான் இந்த 7000 ரூபாவை சேர்த்து குடுத்திருக்கவேணும்.

உண்மையில் இந்த காசை தவராசா வீட்டு வாசலில் தொங்கவிட்டதுக்கு பதிலாக வடக்குமாகாண சபை வாசலில் எறிந்துவிட்டு போயிருக்கவேணும்!

நன்றி
பருத்தித்துறை - முகநூல்



 


SHARE

Author: verified_user

0 komentar: