Breaking

Post Top Ad

Wednesday, June 6, 2018

மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரி வீதி காபட் இடும் பணிகள் ஆரம்பம்...

மட்டக்களப்பு மாநகர முதல்வரின் பணிப்புரைக்கமைவாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரி வீதி காபட் இடும் பணிகள் இன்று (06) ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் வை.தர்மரெட்ணம், மட்டக்களப்பு மாவட்டப் பிரதம பொறியியலாளர் எம்.பத்மராஜா, நிறைவேற்றுப் பொறியியலாளர் என்.சசிநந்தன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.பைசல் ஆகியோர் கலந்து கொண்டு இப் பணியை ஆரம்பித்து வைத்தனர்.

மாநகர முதல்வரின் பணிப்புரைக்கமைய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 8 மில்லியன் ரூபா நிதியில் 500 மீட்டர் வரையில் மேற்படி வீதி காபட் இடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.












No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages