ஜனதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக பேண்தகு பாடசாலை அபிவிருத்தி செயல் திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் தற்போது நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது .
இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு கல்வி வலயமட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு செயல்திட்டங்கள் நடைமுறைபடுத்தபட்டுள்ளது.
இதற்கு அமைய மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டது
வித்தியாலய அதிபர் எ .ராசு தலைமையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,வேலூர் கிராம இளைஞர்கள் மற்றும் வேலூர் கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் பங்களிப்புடன் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடை பவனி இடம்பெற்றது
இந்த விழிப்புணர்வு நடை பவனியாது பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி வேலூர் கிராம பிரதான வீதி ஊடாக மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதிக்கு சென்று மீண்டும் நடை பவனி பாடசாலையை வந்தடைந்து
இதன் போது போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை மாணவர்கள் ஏந்தியவாறு நடை பவனியில் கலந்துகொண்டனர்
இந்த விழிப்புணர்வு நடை பவனியில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்துரி ஆராச்சி , மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக தொழில் வழிகாட்டல் ,வலயமட்ட போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எ .ஜெகநாதன் , காத்தான்குடி வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரிகள், மற்றும் பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்
குறித்த போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வலயமட்டத்தில் ஆசிரியர்களுக்கான ஐந்து வேலைத்திட்டத்தின் குழு அமைக்கப்பட்டு அதனூடாக மாணவர்கள் ,பெற்றோர் மற்றும் சமூகத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.