வவுனியாவில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் தேங்காயின் விலை, விளம்பரப்பலகையில் காட்சிப்படுத்தப்படாமையினால் வியாபார நிலைய உரிமையாளருக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்புச்சபையின் அதிகாரிகளினால் தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா சாந்தசோலையிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் சென்ற விலை கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் வியாபார நிலையத்திலுள்ள பொருட்களை பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள்.
இதன்போது, விளம்பரப்பலகையில் தேங்காயின் விலை காட்சிப்படுத்தப்படவில்லை. இதனால், குறித்த வியாபார நிலைய உரிமையாளரிடம் ரூபா 3000ஆயிரம் தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வவுனியா நகர்ப்பகுதியில் அதிகளவில் தேங்காய் வியாபாரம் மேற்கொள்ளும் வர்த்தக நிலையங்களில் தேங்காயின் விலை காட்சிப்படுத்தப்படுவதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.