Breaking

Post Top Ad

Tuesday, June 26, 2018

மட்டக்களப்பில் கோர விபத்து! இருவர் பலி .பலர் படுகாயம்

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரவுநேரப் பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு கிரான் அருகே இந்த விபத்து திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்துடன் வான் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


இதன்போது வானில் பயணித்த பலர் விபத்தின் காரணமாக காயமடைந்துள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் வேனைச் செலுத்திச் சென்ற சாரதி வினோஜன் (வயது 25) மற்றும் அதே வேனில் பயணித்த பிரகாஷ் கெல்வின் (வயது 11) எனும் சிறுவனும் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளனர். மற்றும் அதே வேனில் பயணித்த மூவர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரதேச மக்கள் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்கள்.


 காயமுற்றோர் மட்டக்களப்பு  வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இவ் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages