Breaking

Post Top Ad

Monday, June 4, 2018

ஏழாயிரம் ரூபா​வை திருப்பி வழங்குவோம்! மாணவர்களின் செயற்பாடு


முள்ளிவாய்க்கால் நினைவு வணக்கத்துக்காக வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் நுPனுP தவராசா தாம் அன்பளிப்பு செய்த ஏழாயிரம் ரூபாவை திருப்பி கேட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (04) மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் கிழக்குப்பல்கலைக்கழக மாணவர்கள் உண்டியல் குலுக்கி ஒருநபரிடம் தலா ஒருரூபாவீதம் அந்தப்பணத்தை அறவீடு செய்தனர்.இந்த ஏழாயிரம் ரூபாவும் மிகவிரையில் வடமாகாண எதிர்கட்சி தலைவர் ஈபிடிபி சி.தவராசாவிடம் உத்தியோகபூர்வமாக யாழ்பாணத்தில் அவரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் கிழக்கு பல்கலைக்கழக மாணவன் தெரிவித்தானர்.

உண்டியல் குலுக்கும் மாணவர்கள் கையில் வைத்திருந்த துண்டுப்பிரசுரம் பினியோகித்தனர். அந்த துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவதுஎமதருமை உறவுகளே!

மே 18 என்பது  எல்லாத் தமிழர்களின் நெஞ்சையும் உறைய வைப்பது .தமிழினப் படுகொலைகளின் குறியீடாக இந்நாள் உலகத்தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சம்பூரில் ஆரம்பித்து வாகரை, மன்னார் வழியாக முள்ளிவாய்க்கால் வரை எம்மினம் சந்தித்த அவலங்களை நினைவு கூர  பலதரப்பினரும் இவ்வாண்டு தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தனர். அந்தவகையில் வடமாகாணசபை உறுப்பினர்களின் மாதாந்தக் கொடுப்பனவிலிருந்து ரூபா ஏழாயிரம் அறவிடுவதெனத்  தீர்மானிக்கப்பட்டிருந்தது.      

இந்த வகையில் தனது பெயரில் அறவிடப்பட்ட   ரூபா ஏழாயிரத்தையும் திருப்பி வழங்குமாறு வடமாகாணசபை எதிர்க்கட்சித்  தலைவர் தவராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறான சிந்தனை உள்ளவர்களின் நிதிப்பங்களிப்புடன் எமது பிள்ளைகளை நினைவு கூருவது எமது உறவுகளின் ஆத்மாக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

எங்களது வலி, வேதனை , கண்ணீர் எல்லாம் எங்களோடே இருக்கட்டும். இதன் தாக்கமெல்லாம் தெரியாமல் ஒருவர் இருக்கிறார் என்றால் அது அவர் வளர்க்கப்பட்ட   முறையின் விளைவே யாகும்.   முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்த இவர் அங்கம் வகித்த கட்சியின் அதிகாரத்திலிருந்த யாழ். மாநகர சபையில் தீர்மானம் கொண்டுவந்தபோது மேயர் அதனை அனுமதிக்கவில்லை. அங்கு பொதுமக்கள் கொல்லப்படவில்லை என யாழ். நகரத்தில் ஆர்ப்பாட்டம் செய்து உலகுக்கு அறிவித்த இவர்களது பாவப்பட்ட பணம் இந்த நிகழ்வுக்குச்  சேராமலிருப்பது பொருத்தமே .  

ஆகவே நாங்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு ரூபா வீதம் பங்களித்து இந்த ஏழாயிரம் ரூபாவையும் வடக்கு மாகாணசபையினரிடம் ஒப்படைப்போம். உணர்வுள்ள ஏழாயிரம் பேர் தலா ஒரு ரூபாய் தாரீர் !


பாவம் வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் தவராஜா . இக் கொடுப்பனவு இல்லாமல் அவரது குடும்பம் சிரமப்படுகிறது போல் தெரிகிறது. அந்தச் சிரமத்தை நாம் இணைந்து போக்குவோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழில். அரசியலைத் தொழிலாகக்  கொண்டோரின் வயிற்றிலடித்து அவர்களது மனைவி, பிள்ளைகளின் சாபத்துக்கு இலக்காக வேண்டாம்.

எனவே ஒரேயொரு ரூபாயினை தமிழ் பேசும் மகனும் வழங்கி உணர்வுள்ள உறவுகள் நாம் என்பதை நிலைநாட்டு வோம் !

வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் தவராசாவின் முள்ளிவாய்க்கால் உணர்வை இது மூலமாக எல்லோரும் உணர்வோம்.

இவ்வாறு அந்த துண்டு பிரசுரத்தில் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages