Breaking

Post Top Ad

Saturday, June 9, 2018

இந்துசமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெறும் 'தேசிய அறநெறி விழா'

 இந்துசமய அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கோடு இந்துசமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதம், இந்துசமய அறநெறிக் கல்விக் கொடிதினம் ஆகியன 'இளஞ்சிறார்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு அறநெறிக்கல்வி தேவையென உணர்வீர்' எனும் தொனிப்பொருளில் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் குருபூசைத் தினமாகிய மே மாதம் 31 ஆம் திகதியை ஆரம்ப நாளாகக்கொண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தாற் தேசிய அறநெறி விழாவாக நாடு முழுவதும் அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இதில் ஓர் அங்கமாக, கல்லடி  இராமகிருஸ்ண மிஸனில் இருந்து நாவற்குடா இந்துகலாசார நிலையம்  வரை அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வுப் பேரணி, திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் குருபூஜை நிகழ்வு, இந்துசமய அறநெறிக்கல்விக் கொடிதின நிகழ்வுஇ இந்து சமயக் கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தினால் (சுவாமி விபுலானந்தா பயிற்சி நிலையம்) நடாத்தப்பட்ட இந்துசமய அறநெறிக்கல்வி ஆசிரியர்களுக்கான சான்றிதழ்ப் பயிற்சி நெறியைப் பூர்த்திசெய்த முதலணியினரிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, 'அறநெறி ஆனந்தம்' திட்டத்தின் கீழ் இந்துசமய அறநெறிக் கல்வி ஆசிரியர்களுக்கான முதலாவது பட்டயக் கற்கைகள்(டிப்ளோமா) பயிற்சி நெறியினை ஆரம்பித்துவைத்தல் நிகழ்வுகள் ஆகியன நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளன.


10.06.2018 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் 'தேசிய அறநெறி விழா – 2018' சிவயோகச் செல்வர் சிவஸ்ரீ சாம்பசிவ சிவாச்சாரியார் அவர்கள் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்க, பிரதேச செயலாளர்கள், அரச உயரதிகாரிகள், கல்விமான்கள் எனப் பலரும் பங்குகொள்ளவுள்ள இந்நிகழ்விற்கு அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages