இப் பாலம் அமைப்பது தொடர்பில் பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரதேச சபை உறுப்பினர் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் ஆகியோரின் பங்குபற்றலுடன் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலின் போது மக்களினால் சந்தனமடு ஆற்றிற்குச் செல்லும் பிரதான வீதியில் மூன்று சிறிய பாலங்கள் அமைக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. ஆனால் இந்தக் கல்மடு வேரம் பிரதேசத்தில் கல்மடு ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட வேண்டிய பாலமானது மிகவும் பயன்மிக்கதாக அமையும். ஏனெனில் இவ்வாற்றினைக் கடந்து ஈரளக்குளம், இலுக்குப்பொத்தானை, பெருமாவெளி, பெரியவெட்டவான் போன்ற பல்வேறு கிராமங்கள் இருக்கின்றன.
இக்கிராமங்களுக்குச் செல்லும் பிரதான வீதியாக இவ்வீதி காணப்படுகின்றது. அத்துடன் நான்கு பாடசாலைகளும் இருக்கின்றன. அமைக்கப்பட வேண்டிய இப்பாலமானது அமையப்பெற்றால் பிரதேச மக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினர் இதன் மூலம் நன்மையடைவார்கள் என்று இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இப்பாலம் அமைப்பது தொடர்பில் உரிய அமைச்சுக்கும் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று இதனை அமைப்பதற்குரிய சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்வதாகப் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் இதன்போது தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.