Breaking

Post Top Ad

Wednesday, June 6, 2018

வட­மா­காண ஹொக்­கியில் முடிசூடிய பண்­டத்­த­ரிப்பு மக­ளிர் அணி!

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான ஹொக்­கித் தொட­ரில் 20 வயது பெண்­கள் பிரி­வில் பண்­டத் த­ரிப்பு பெண்­கள் உயர்­த­ரப் பாட­சாலை அணி கிண்­ணம் வென்­றது.

யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூ­ரி­யில் நேற்று இந்த இறு­தி­யாட்­டம் நடை­பெற்­றது.

வவு­னியா நெளுக்­கு­ளம் கலை­ம­கள் வித்­தி­யா­லய அணியை எதிர்த்து பண்­டத்­த­ரிப்பு மக­ளிர் உயர்­த­ரப் பாட­சாலை அணி மோதி­யது.

ஆட்­டத்­தின் 13ஆவது நிமி­டத்­தில் பண்­டத்­த­ரிப்பு மக­ளிர் உயர்­த­ரப் பாட­சாலை அணி­யின் முத­லா­வது கோலைப் பதி­வு­செய்­தார் நிரோ­சிகா.
அடுத்த நிமி­டத்­தி­லேயே லக்­சிகா மற்­றொரு கோலைப் பதி­வு­செய்ய முதல் பாதி­யின் முடி­வில் 2:0 என்ற கோல் கணக்­கில் முன்­னிலை வகித்­தது பண்­டத்­த­ரிப்பு பெண்­கள் உயர்­த­ரப் பாட­சாலை அணி.

இரண்­டா­வது பாதி­யின் 12ஆவது, 35ஆவது நிமி­டங்­க­ளில் நிரோ­சிகா அடுத்­த­டுத்­துக் கோல்­க­ளைப் பதி­வு­செய்ய ஆட்­ட­ நேர முடி­வில் 4:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது பண்­டத்­த­ரிப்பு பெண்­கள் உயர்­த­ரப் பாட­ சாலை அணி.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages