Breaking

Post Top Ad

Sunday, June 3, 2018

தூத்துக்குடி கலவரத்திற்கு விடுதலைப் புலிகள் தான் காரணம் - சு.சாமி பகீர்.!

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் நெடுநாட்களாவே பல கட்ட போராட்டங்களை முன்னெடுவந்தனர். அந்த வகையில் கடந்த மாத இறுதியில் சுற்றுசூழலை பாதிக்கும் வகையில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென வலியுறுத்தி மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது, பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி சுமார் 13 பேரை சுட்டுக்கொன்றது தமிழக காவல்துறை.


தமிழகத்தினை தாண்டியும் பலத்த அதிர்வலைகளை கிளம்பியுள்ள தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தினை கண்டித்தும், அரசுக்கு எதிராகவும் ஜனநாயக சக்திகள் கருத்துதெரிவித்துவருகின்றனர்.

இந்த சூழலில், இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து பேசினார் பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி. சந்திப்பு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பயங்கரவாதிகள் தான் காரணம். விடுதலைப் புலிகளுக்கும் இதில் தொடர்புக்கு இருந்திடக்கூடும். ஆகவே, இது குறித்து முழுமையான விசாரணை நடத்தி உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்" என பேசினார்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages