Breaking

Post Top Ad

Monday, June 25, 2018

வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் தனது கட்சி சார்ந்தவர்களுக்கு மாத்திரம் உதவி

வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் தனது கட்சி சார்ந்தவர்களுக்கு மாத்திரம் உதவிகளை வழங்கி வருகின்றார் என வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் கோறளைப்பற்று பிரதேச கிளை செயலாளருமாகிய கனகரெத்தினம் கமலநேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளரின் நடவடிக்கைகள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்-


வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளரிடம் என்னால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு மகஜர்கள் கூட வழங்கப்பட்டது. ஆனால் இவ்விடயம் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

தற்போது சபை உறுப்பினர்களின் சிபார்சின் அடிப்படையில் வீதிகளுக்கு மின் விளக்குகள் பொறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் தவிசாளர் தனது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்ந்த உறுப்பினர்களுக்கு மாத்திரம் வழங்கி வருகின்றார்.

எமது கட்சி சில உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சி சில உறுப்பினர்கள் வீதிகளுக்கு மின் விளக்குகள் பொறுத்துவதற்கு கடிதம் வழங்கப்பட்டது. ஆனால் இது தொடர்பில் தவிசாளர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தங்கள் கட்சி சார்ந்தவர்களின் பகுதிக்கு மாத்திரம் சேவை செய்து வருகின்றார்.

பதவி ஏற்றதும் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒற்றுமையாக சேவையை செய்வதாக கூறிய தவிசாளர் தற்போது தனது கட்சி சார்ந்து செயற்படுவது வேதனை அளிக்கின்றது. ஒரு தவிசாளர் தனது கட்சி சார்ந்து சேவை செய்வதும், அத்தோடு கட்சி ரீதியாக சபையை செயற்படுத்துவம் உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய விடயமாக உள்ளது.

இவ்வாறு கட்சி சார்ந்து செயற்படுவது வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட மக்களை ஏமாற்றும் செயலாகவே கருதப்படுகின்றது. ஆகவே வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் கட்சி சார்ந்து செயற்படாது மக்கள் நலன் சார்ந்து ஏனைய சபை உறுப்பினர்களால் கொண்டுவரப்படும் தேவைகளை நிறைவேற்றும் முகமாக செயற்பட வேண்டும் என கேட்;டுக் கொள்கின்றேன்.

இவ்விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையடி சபைக்குட்பட்ட வீதிகளை புனரமைப்பு செய்வதற்கு நிதி ஒதுக்கீடுகளை பெற்றுக் கொள்வதற்கும் தாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages