Breaking

Post Top Ad

Friday, June 15, 2018

வாகரை கதிரவெளியில் சம்பந்தர் குரு பூசை ஊர்வலம்

வாகரை கதிரவெளி வீரகத்தி அறநெறி பாடசாலையின் ஏற்பாட்டில் இந்து சமய அறநெறி கல்வியின் முக்கியத்துவமும், அறநெறி கொடி தின நிகழ்வும், திருஞான சம்பந்தர் குருபூசை நிகழ்வும் கதிரவெளி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில்   இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வாகரை பிரதேச சபை தவிசாளர் எஸ்.கோணலிங்கம், பிரதேச சபை உறுப்பினர் எஸ்.துரைராஜசிங்கம், வாகரை பிரதேச செயலக இந்து சமய கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ரூபன், வாகரை பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், புச்சாக்கேணி அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள், கதிரவெளி வீரகத்தி அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள், கிராம மக்கள் என கலந்து கொண்டனர்.


இதன்போது திருஞான சம்பந்தர் குருபூசை நிகழ்வை முன்னிட்டு திருஞான சம்பந்தரின் உருவப் படத்தினை ஊர்வலமான கதிரவெளி  பிள்ளையார் ஆலய முன்பாக இருந்து ஆரம்பமாகி கதிரவெளி திருகோணமலை பிரதான வீதி வழியாக கதிரவெளி வீரகத்தி விநாயகர் ஆலயத்தை சென்றடைந்தது.

அங்கு இந்து சமய அறநெறி கல்வியின் முக்கியத்துவம் பற்றிய கருத்துரைகளும் இடம்பெற்றது.











No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages