
செங்கலடி வர்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்பாட்ட பேரணியில் கட்சி பேதமின்றி அரசியல் பிரதிநிதிகள் பொது அமைப்புக்கள் மற்றும் பிரதேச வாசிகள் பங்கேற்றனர்.
ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச சபை முன்றலில் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டக்கார்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் பிரதேசசபையின் நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலையை கட்டடம் அமைக்கும் பணிகளை நிறுத்துமாறு கோரி பிரதேச சபை உப தவிசாளர் கா.இராமச்சந்திரனிடம் மகஸர் கையளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக பதுளை வீதியூடாகச் பிரதேச செயலகம் வரை சென்று அங்கு பிரதேச செயலாளர் ந.வில்வரெட்னத்திடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர் சா.வியாழேந்திரன் கருத்து தெரிவிக்கையில் -ஏறாவூர்பற்று பிரதேச சபையின் அமர்வு நடவடிக்கைகளை ஆரமப்பிக்கப்படுவதற்கு முன்பு பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கான கட்டட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற விஷேட அமர்வில் தொழிற்சாலையை நிறுத்த வேண்டும் என்ற அமரிவுக்கு ஆதரவாக 12 பேர் மாத்திரம் வாக்களித்துள்ளார்கள் சிலர் நடுநிலை வகித்துள்ளார்கள் சில காரணத்துக்காக சிலர் வெளிநடப்புச் செய்துள்ளனர்கள். 31 பேர் கொண்ட சபையின் 12 பேர் மாத்திரம் ஆதரவு வழங்கியுள்ளார்கள்.
தொழிற்சாலை தொடர்பாக ஆராய்வதற்கு நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் பணிகள் தொடரும்வரை குறித்த தொழிற்சாலை அமைக்கும் பணிகளை இடைநிறுத்துவதற்கு ஏறகமனதாக உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டுவரவேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைத்துள்ள இந்த பிரதேச சபையில் மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினை நிலப்பிரச்சினை என பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்புபட்ட போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலையினை பிரச்சினையில் சரியான முடிவு இந்த சபை எடுக்காவிடின் பிரதேச சபைக்கு வழங்கிய ஆதரவினை தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிசீலனை செய்யும்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பிரதேச சபை உறுப்பினர் ந.திருநாவுக்கரவு கருத்து தெரிவிக்கையில் - பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலை தொடர்பான பிரேரணை கொண்டுவந்த சமயம் சபையிலிருந்து பார்வையாளரர்களாக இருந்த மக்களை வெளியேற்றியதன் காரணமாக நாங்கள் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தோம்.
நாங்கள்; போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு நாங்கள் ஒரு போதும் ஆதரவ வழங்க மாட்டோம். தமிழ் மக்களுக்குச் சாதகமான விடங்களை மாத்திரதே நாங்கள் பரிசீலிப்போமே தவிர எந்தவித பாதகமான விடங்களுக்கு ஆதரவு வழங்க மாட்டோம் என்றார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.