Breaking

Post Top Ad

Sunday, June 17, 2018

பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலய வருடாந்த மஹோற்சவ திருவிழா

(க. விஜயரெத்தினம்)
கொக்கட்டிச்சோலை, பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலய வருடாந்த பெருவிழா வெள்ளிக்கிழமை(15.6.2018)  ஆரம்பமாகி எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறும் தீர்த்தோற்சவத்துடன் வருடாந்த மஹோற்சவ விழா நிறைவுபெறவுள்ளது.

மட்டக்களப்பு தமிழகத்தில் படுவான்கரை பெருநிலம், பழைமை கூறும் பற்றுள்ள தமிழர் வாழும் பண்டாரியாரியாவெளி பதியில்  வரலாற்று சிறப்பு மிக்க ஶ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த மஹோற்சவம் வெள்ளிக்கிழமை (15.6.2018)  கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22.6.2018)  தேசத்துப்பொங்கலும்,பொது திருவிழாவும்,தீர்த்தோற்சவத்துடன் இவ்வருட மஹோற்சவம் நிறைவுபெறவுள்ளதாக ஆலய பிரதம பூசகர் சிவஸ்ரீ த.குருகுலநாதக் குருக்கள் தெரிவித்தார்.

ஆலயத்தில் தொடர்ச்சியாக எட்டுநாட்கள்  பட்டிப்பளை,அம்பிளாந்துறை,அரசடித்தீவு, கடுக்காமுனை,மகிழடித்தீவு, பண்டாரியாவெளி,படையாண்டவெளி ஆகிய கிராம மக்களின் பூசைகள் இடம்பெறவுள்ளது.
இந்த ஆலயத்தில் தேசத்து பொங்கல் என்பது மிக சிறப்பு வாய்ந்த பொங்கலாகும்.ஆயிரக்கணக்கான பானைகளில் பொங்கி  நாகதம்பிரானுக்கு படைத்து வழிபடும் ஒரு பாரம்பரிய பொங்கல் வழிபாடு இவ்வாலயத்தில் தனிச்சிறப்புண்டு



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages