சர்வதேச யோகாதினத்தை உற்படுத்தியதாக காலை 6.50 தொடக்கம் 7.50 வரையான நேரத்தில் 18.06.2018முதல் 22.06.2018 வரை தொடர்சியாக ஜந்து நாட்களும் நடைபெற்றிருந்தது.
வித்தியாலய அதிபர் திரு.ச.கணேசமூர்த்தி அவர்களின் தலைமையில் மேற்படி நாட்களில் நடைபெற்ற இதில் தரம் 6-13 வரையான மாணவர்கள் பெரும் பயன்பெற்றனர். இறுதி நாளான 22.06.2018 இன்றைய தினம் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர்
இந்நிகழ்வின் போது பிரதம அதிதியாக போரதீவுப்பற்று கல்விக்கோடத்தின் கோட்டைக்கல்வி அதிகாரி திரு.த.அருள்ராஜா கலந்துகொண்டு யோகாசனத்தின் முக்கிணத்துவம் பற்றி விசேட உரைநிகழ்த்தினார். அதிபர் தலைமையுரையில் சர்வதேச யோகா தினமும் அதன் முக்கியத்துவமும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார் திரு.மு.கோவிந்தராசா பிரதியதிபர் திரு.பூ.சுதானந்தன் சிரேஷ்ர அசிரியர் அவர்களும் கருத்துரை ஆற்றினர் வாழும் கலை அமைப்பின் உறுப்பினரும் பயிற்றுவிப்பாளருமாகிய திரு.யோ.யோகேந்திரா அவர்களும் யோகாசனம் பற்றி விசேட உரை நிகழ்த்தினார்
யோகாசனப் பயிற்சிகளை வாழும் கலையமைப்பின் உறுப்பினர்களான திரு.நா.கோகுலதாஸ் செல்வி.ந.கஜானி அவர்களும் வழங்கினர் அதிகாரிகளும் ஆசிரியர்களும் மாணவர்களும் பயிற்சிகளில் விருப்புடனீடுபட்டனர்
ஆரம்பவைபமாக வாழும் கலையமைப்பின் ஸ்தாபகர் ரவிசங்காஜி அவர்களின் திருவுருவப்படத்திற்கு குரு அஞ்சலியை மலரஞ்சலியாக செலுத்தும் நிகழ்வு மிக கோலாகலமாக இடம்பெற்றது மாணவி செல்வி.வெ.லக்ஷனா அவர்களழனால் மகிழ்வுரையும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.