Breaking

Post Top Ad

Tuesday, June 5, 2018

இலங்கை மின்சார சபையின் மின் கம்பங்களில் கம்பி வழி தொலைக்காட்சி இணைப்பு துண்டிப்பு

வடக்கு மாகாணத்தில் மின் கம்பங்களில் இணைக்கப்பட்டுள்ள கம்பி வழி தொலைக்காட்சி இணைப்பு வயர்களை அகற்றுமாறு இலங்கை மின்சார சபையின் தலைமையகம் வடபிராந்திய அலுவலகத்துக்கு பணித்துள்ளது.

அதற்கமைய கேபிள் ரீவி இணைப்பு வயர்களை அகற்றும் பணிகளை மின்சார சபை ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பித்தனர்.

இலங்கை மின்சார சபையின் இந்த திடீர் நடவடிக்கையால் கேபிள் ரீவி வாடிக்கையாளர்கள், தொலைக்காட்சி அலைவரிசைகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages