Breaking

Post Top Ad

Friday, June 8, 2018

திருகோணமலை மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மீன்பிடிக் கட்டுப்பாடு நீக்கம்

திருகோணமலை மீனவர்கள், ஏழு கிலோமீற்றருக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை, நேற்று(07) முதல் நீக்கப்பட்டுள்ளதென, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவை, கடந்த புதன்கிழமை , இம்ரான் எம்.பி சந்தித்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட மீனவர்கள், கடற்கரையிலிருந்து ஏழு கிலோமீற்றருக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடிக்க, மீன்பிடித் திணைக்களத்தால் கடந்த சில ஆண்டுகளாகத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

தமது வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு இத்தடையை மீறிய மீனவர்கள், கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages