Breaking

Post Top Ad

Monday, June 4, 2018

ரஜினி மீது தேசத்துரோக வழக்குபதிவு செய்ய கோரி நடிகர் சரத்குமார் ஆவேசம்……..!

சினிமா துறையில் பல படங்களில் தனக்கென இடம் பிடித்தவர்களில் சரத்குமார் முதன்மை இடத்தை வகிப்பவர். அதே சினிமா துறையில் நடிக்கும் நடிகை ராதிகாவை இரண்டாவதாக மணம் முடித்து பல சர்ச்சைகளுக்கும் குறையில்லாதவர்.

அந்தவகையில் தற்போது இடம்பெற்ற தூத்துக்குடி போராட்டத்தில் மக்களை கொச்சைப்படுத்தியதாக கூறி ரஜினி மீது மக்கள் அதிருப்தியை தெரிவுபடுத்தி வருகின்றனர். இப்போது ரஜினிக்கு எதிர்மறையாக சரத்குமாரும் பதிலளித்துள்ளார்.

மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய, நடிகர் ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் சரத்குமார் பேட்டி அளித்துள்ளார். மேலும் கலவரத்தில் சமூக விரோதிகள் எனக் கூறும் ரஜினி, அவர்களை பற்றிய விவரங்களை ஒருநபர் விசாரணை ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages