Breaking

Post Top Ad

Saturday, June 9, 2018

காத்தான்குடியில் பிக்கு செய்த மோசமான காரியம்

மட்டக்களப்பு காத்தான்குடியில் பௌத்த பிக்கு ஒருவர் கடந்த சில தினங்களாக வீடுகளில் பண வசூலில் ஈடுபட்டு வருவது குறித்து விசாரணை நடத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜெயகொட ஆராச்சி காத்தான்குடி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.


காத்தான்குடியில் கடந்த சில தினங்களாக பௌத்த பிக்கு உட்பட மூன்று பேர் ஆதரவற்றவர்களை பராமரிப்பதற்காக நன்கொடை வழங்குமாறு கோரி வீடுகளில் பணம் வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான பற்றுச் சீட்டையும் இந்த மதகுரு வழங்கியுள்ளார். 

இந்த பண வசூலிப்பில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து சமூக செயற்பாட்டாளரும் வர்த்தகருமான எம்.கே.கலீல் ஹாஜியார் என்பவர்  பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு புதன்கிழமை மாலை கொண்டு வந்துள்ளார்.

இதனையடுத்து இந்த நடவடிக்கை தொடர்பில் குறித்த பௌத்த பிக்குவை விசாரணை செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜெயகொடஆராச்சி காத்தான்குடி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்,

குறித்த பௌத்த பிக்கு வட மத்திய மாகாணத்தில் நடத்தி வந்த ஆதரவற்றோருக்கான சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்கள் மூடப்பட்டு
விட்டதாகவும் இவர் பொய் கூறி பண வசூலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிய வந்ததையடுத்தே இதனை பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக கலீல் ஹாஜியார் தெரிவித்தார்.

குறித்த பௌத்த பிக்கு வடமத்திய மாகாணத்தை சேர்ந்தவர் எனவும் கடந்த சில தினங்களாக காத்தான்குடியில் உள்ள வீடுகளில் பண வசூலில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages