Breaking

Post Top Ad

Saturday, June 2, 2018

கோட்டைக்கல்லாற்றில் பாரிய டெங்கு சிரமதானம்

(க. விஜயரெத்தினம்)
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாற்றில்
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம்,பிரதேச சபை,சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகஸ்தர்கள்  கூட்டாக இணைந்து டெங்கு சிரமதானம் சனிக்கிழமை(2.6.2018) காலை 8.30 மணியளவில்  நடைபெற்றது.


கோட்டைக்கல்லாற்றில் டெங்குநோயினால்  27பேர் இணங்காணப்பட்டதையடுத்து  மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடந்த புதன்கிழமை எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவும்,சுகாதார வைத்திய அதிகாரி அவர்களின் விஷேட பரிந்துரைக்கு அமைவாகவும் இச்சிரமதானம் நடைபெற்றது.

டெங்கு குடம்பிகள் உற்பத்தியாகும் வெற்றுப்போத்தல்கள், பிளாஸ்ரிப்பொருட்கள், பொலீத்தின்,உட்காத பொருட்கள்,பற்றைக்காடுகள் என்பனவற்றை டெங்கு சிரமதானத்தின் போது அகற்றப்பட்டதுடன் பொதுமக்களினாலும்,வழிப்போக்கரினாலும் இனிமேல் பொதுஇடங்கள்,பாழடைந்த கட்டிடங்கள்,பழைய வீடுகளில் கழிவுகளை வீசுவதை நிறுத்த வேண்டும் என இதன்போது பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் அறிவுறுத்தல்கள்,ஆலோசனைகள்  வழங்கப்பட்டன.

இச்சிரமதானத்தின்போது களுதாவளை பிரதேச சபைச் செயலாளர் கே.லக்ஷிமிகாந்தன்,பிரதேசசபையின் உப தவிசாளர் திருமதி.ரஞ்சினி கனகராசா,பிரதேச சபை உறுப்பினர்களான த.ஜயேந்திரராசா,த.சுதாகரன்,செல்வி.ர.சுகன்யா,பொதுச்சுகாதார பரிசோதகர் ப.யதுநாதன் உட்பட சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள்,கிராமசேவை உத்தியோகஸ்தர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages