Breaking

Post Top Ad

Sunday, June 3, 2018

தூத்துக்குடி போராட்டத்தில் கைதானவர் சிறையில் மர்ம மரணம்!

பரத்ராஜா என்பவர் சிறையில் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திரவியபுரத்தை சேர்ந்த பரத்ராஜா (36) என்பவர் தூத்துக்குடியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைதாகி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள்தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் கடந்த 23-ம் தேதி அவரது தம்பி தனசேகரனுக்கு திருமணம் நடைபெற இருப்பதையொட்டி, அதில் கலந்து கொள்வதற்காக 7 நாட்கள் பரோலில் வெளிவந்திருந்தார். இதற்கிடையில் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் பரத்ராஜா ஈடுபட்டதாக கூறி 23-ம் தேதி காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு விசாரணை என்கிற பெயரில் காவல்துறையினர் நடத்திய கடுமையான தாக்குதலில், பரத்ராஜா காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இதனையடுத்து மீண்டும் கைது செய்யப்பட்ட பரத்ராஜா கடந்த 30-ம் தேதி சிறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சைக்காக நெல்லை மருத்துவமனையில் பரத்ராஜா அனுமதிக்கப்பட்டிருந்த போது, காவல்துறையினர் தன்னை அடித்து உதைத்ததாக மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்தாலே கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages