பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகிய இருவரம் இணைந்து, பாடசாலை மாணவர்களுக்கு டெப் வழங்கும் திட்டத்தை செயற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலை மாணவர்களுக்கு, டெப் வழங்கும் திட்டமானது, தேர்தல் கால வாக்குறுதி என்பதால், அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முனைப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைவாக, எதிர்வரும் மூன்றாம் தவணையின் ஆரம்பத்தில், பாடசாலை மாணவர்களுக்கு டெப் விநியோகிக்கப்படலாமென, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அரசாங்கம் ஒரே நேரத்தில் கம் பெரால்லிய, எனடர்பிரைஸ் ஸ்ரீலங்கா மற்றும் கிராமிய சக்தித் திட்டத்தை அமுல்படுத்துவதற்கும் தீர்மானித்துள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.